கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்! ரசிகர்கள் தலைவர்கள் வாழ்த்து!

0
118
Captain vijayakanth's birthday today
Captain vijayakanth's birthday today

கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்! ரசிகர்கள் தலைவர்கள் வாழ்த்து!

தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு இன்று 69வது பிறந்த நாள்.அவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்.மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் பதவியை வகிக்கிறார்.இவரின் திரைப்பயணமும் அரசியல் பயணமும் தமிழ்நாட்டில் பெருமளவில் பேசப்பட்டது.

விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்ன கிராமத்தில் பிறந்தார்.அவரின் இயற்பெயர் விஜயராஜ் ஆகும்.சிறுவயதிலேயே இவரது குடும்பம் மதுரைக்கு சென்றது.அவர் வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான்.சிறுவயதிலிருந்தே அவர் நடிப்பின்மீது ஆர்வம் கொண்டிருந்தார்.அதனால் அவர் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.அதனால் சிறுவயதில் அவரது அப்பா நடத்தி வந்த அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்தார்.

விஜயகாந்த் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்து சென்னைக்கு புறப்பட்டார்.பல முயற்சிகளை அடுத்து இயக்குனர் எம்.ஏ.காஜா இவரை வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தினார்.இவரின் முதல் திரைப்படம் இனிக்கும் இளமை ஆகும்.இந்த திரைப்படத்தில்தான் தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.இந்த திரைப்படம் வெற்றிபெறவில்லை.அதற்கு அடுத்து இவர் நடித்த படங்களும் வெற்றி பெறவில்லை.

ஆனாலும் அவர் வெற்றி பெற முயற்சி செய்து கொண்டே இருந்தார்.தூரத்து இடி முழக்கம் என்ற படம் இவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.அதன் பிறகு நடித்த சட்டம் ஒரு இருட்டறை படமும் மெகா ஹிட் படமானது.அதன் பின்னர் தான் தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்தின் இருப்பு மக்களுக்கு தெரிய வந்தது.80களில் தமிழ் சினிமாவில் ரஜினி.கமல் ஆகிய நடிகர்களின் படங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தின.அவர்களையடுத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் தேர்வு இவராகவே இருந்தார்.இவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் 200 நாள் தியேட்டர்களில் ஓடி மெகா ஹிட் ஆனது.

அதன் பிறகும் பல வெற்றிப் படங்களை அவர் கொடுத்தார்.1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் விஜயகாந்த் இருந்தார்.2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.2006 மற்றும் 2011 வருடங்களில் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார்.2011ம் ஆண்டு தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இவர் இருந்தார்.2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இவர் தோல்வியைத் தழுவினார்.

அதன்பிறகு இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரால் அரசியல் பணிகளை சரிவர செய்யமுடியவில்லை.இருப்பினும் இவருக்கு தமிழக மக்களின் மனதில் என்றும் ஒரு இடம் இருந்துகொண்டே இருக்கிறது.இவரின் பிறந்தநாளுக்கு பொதுமக்கள் பலரும் அரசியல் தலைவர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! சாதனை படைப்பாரா பும்ரா?
Next articleஇந்திய அணியின் முக்கிய வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் விராட் கோலி!