திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய கார்- லாரி ஒருவர் உயிரிழப்பு!

Photo of author

By Sakthi

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்துள்ள அப்பன நல்லூர் கிராமத்தைச் சார்ந்தவர் மதியழகன். சுமார் 50 வயது மதிக்கத்தக்க இவர், தற்போது திருச்சி திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி நகரில் வசித்து வருகின்றார். மதியழகன் நேற்று தன்னிடைய உறவுக்காரப்பெண்ணுடன் முசிறி சென்றுவிட்டு திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது வாத்தலை அடுத்துள்ள கரியமாணிக்கம் என்ற இடத்தில் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த போது கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேராக மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் அந்த காரை இயக்கிக் கொண்டிருந்த மதியழகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அத்துடன் அவருடன் வந்த பெண் வெகுவாக காயம் அடைந்தார்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை காவல்துறையினர் காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு இந்த சம்பவத்தில் பலியான மதியழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றன.