தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார்! ஓட்டுநர் பலி பரபரப்பு சம்பவம்!

0
211
Car upside down in the ditch! The driver died in a sensational incident!
Car upside down in the ditch! The driver died in a sensational incident!

தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார்! ஓட்டுநர் பலி பரபரப்பு சம்பவம்!

ஈரோடு மாவட்டம் அருணாச்சலம் வீதி சஞ்சய் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார்.இவர் வேளாண்மை துறையில் லேப் டெக்னீசியர்ராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் நேற்று நள்ளிரவில் நசியனூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.அவருடைய காரானது கருப்பராயன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென கார் ஜெயக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.அந்த நேரத்தில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாவனி போலீசார் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் போலீசார் ஜெயக்குமாரின் உடலை கைபற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கார் தானாகவே பள்ளத்தில் கவிழ்ந்ததா இல்லை யாரேனும் விபத்து ஏற்படுத்தி அங்கிருந்து சென்று விட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமாற்றத்தை நோக்கி தமிழகம்! ட்விட்டரில் இன்று இரவு 8 மணியளவில் உரையாற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
Next articleபிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு!