மூலப்பொருட்களின் விலை உயர்வால் நாளை முதல் உயர்ந்து விற்கப்படும் அட்டை பெட்டிகள் :!!

0
88

தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்ட அமைப்பு நிர்வாகிகள் காணொளி காட்சி மூலம் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

அதில் சங்கத் தலைவர் ஈ.வி.ராதாகிருஷ்ணன் விவாதித்து எடுத்துக்காட்டப்பட்ட முடிவுகள் குறித்து பேசியுள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக அட்டைப் பெட்டி உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான காகிதத்தின் விலையும் , பசை மாவு உள்ளிட்ட பொருட்கள் , ஸ்டிச்சிங் போன்ற பொருட்களின் விலையும் கடந்த 3 மாதமாக அதிகரித்துள்ளதாக கூறினர்.

மேலும் , தொழிலாளர்கள் பற்றாக்குறையாளும், ஊதியமும் போக்குவரத்து செலவும் அதிகமானதும் ஒரு காரணமாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, காகித ஆலைக்கு நிறுவனங்கள் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு அதிக அளவில் மட்டுமே மூலப்பொருட்களை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், வாடிக்கையாளர் அதிகபட்சம் 90 நாட்களுக்கு மேல் பாக்கி தொகை செலுத்தவில்லை என்பதானால்,நிதி நெருக்கடியை சமாளிக்க வரும் 15-ஆம் தேதி முதல் அட்டைப் பெட்டிகளை தற்போதைய நிலையிலிருந்து 20 சதவீதம் உயர்த்தி விற்கப்பட்ட இருப்பதாக அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டத் தலைவர் ஈ.வி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Previous articleஇரட்டைத்தள பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ!!
Next articleஇந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா