கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!!

Photo of author

By Rupa

கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!!

Rupa

Cartoon Network sudden cancellation of broadcast? 90s Kids in Sadness!!

கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!!

90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான சேனலாக கார்ட்டூன் நெட்வொர்க் உள்ளது. இதில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல கார்ட்டூன் 90ஸ் கிட்ஸ் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாதவை. குறிப்பாக டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, கரேஜ் தீ கவர்ட்லி டாக், லேமப்கார்ட், டாபி ஆகிய நிகழ்ச்சிகள் 90ஸ் கிட்ஸ் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால் நாளடைவில் இதுபோல பல சேனல்கள் வந்தததால் கார்ட்டூன் நெட்வொர்க்குக்கு கிடைத்த வரவேற்பு சற்று குறைந்தது.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் குழந்தைகளின் மிகவும் பிடித்தமான சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவலை அறிந்த 90ஸ் கிட்ஸ் மிகவும் சோகமடைந்தனர். இதுகுறித்து கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்களுக்கு தற்பொழுது தான் 30 வயது பிறந்துள்ளது, இன்னும் நாங்கள் உயிரிழக்கவில்லை.புதுப்புது எபிசோட் உங்களுக்காக வரவுள்ளது இவ்வாறு இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதனைக் கண்ட 90ஸ் கிட்ஸ் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.