சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்!

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்!

சேலம் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்நிலையில்  தொழிலாளர்கள் துறை இணை ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் அன்பழகன் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் நேற்று சேலம் மாவட்டம் முழுவதுமாக 138 தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனர்.

மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களை தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காமல் பணியில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. மேலும் சேலம், ஆத்தூ,ர் மேட்டூர், ஓமலூர்  போன்ற மாவட்டத்தில் 71  ஓட்டல்கள் ,37 கடைகள் ,10 மோட்டார் வாகன தொழிற்சாலைகள் என மொத்தம் 118 நிறுவனங்களின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும்   தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அபராதம்  விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment