அதிமுக பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு! சேலம் போலீசார் ஐகோர்ட்டில் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு! சேலம் போலீசார் ஐகோர்ட்டில் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரம் போன்ற பல்வேறு தகவல்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று தேனீ மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய சேலம் நீதிமன்றம் இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த மனு குறித்து மே 26ம் தேதி முழுமையான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு தடை கோரியும், இந்த உத்தரவை ரத்து செய்யவும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடுத்த தேனீ மாவட்டத்தை சேர்ந்த மிலானி தனது தொகுதியை சேர்ந்தவர் இல்லை. மேலும் அவர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஓராண்டு கால அவகாசத்திற்கு பிறகு இந்த பொய் வழக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கை வரும் மே 26ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது. அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டார்.