தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!! 

Photo of author

By Parthipan K

தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!! 

Parthipan K

Case against Tamilisai.. Action of Telangana Government!!
தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!!
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜ, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறி தெலுங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமார் சார்பில் வக்கீல் உதயகுமார் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.
10 மசோதாக்கள் அந்த மனுவில் கூறியிருப்பது,
அசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா,
நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலை வாய்ப்பு திருத்த மசோதா, வன பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் வேலை நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உள்ளிட்ட பத்து மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த மசோதாக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியல் அமைப்பு சத்தம் அளித்துள்ள உரிமைகளை மீறி கவர்னர் நடந்து கொள்வது வழக்கத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க ாமல் இருக்கு மாறானது.நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும். என சுப்ரீம் கோர்ட்டில் கவர்னர் எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளனர், இந்த வழக்கு விரைவில் விசாரணை வரும் என தெரிகிறது.