தேர்தல் விதிமீறல்! அமைச்சர் வேலுமணி மீது வழக்குப் பதிவு!

0
122

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி காண நேற்றையதினம் தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றது இதில் 234 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தது.இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும், திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆகவே இந்த தொகுதியில் இந்த இருவருக்குமே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையில், குனியமுத்தூர் அரசு பள்ளியில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடியில் தேர்தல் விதிமுறைகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீறிவிட்டதாக தொண்டாமுத்தூர் தொகுதியில் மண்டல அலுவலர் ராஜா முஹம்மது காவல்துறையில் புகார் தெரிவித்தார்.அதாவது தேர்தல் விதிமுறைகளை மீறும் படியாக வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு உள்ளாக கட்சி கொடியுடன் கட்சி துண்டுடன் அமைச்சர் எஸ் பி வேலுமணி வந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Previous articleபடகில் சென்று தங்களின் ஒரு விரல் புரட்சி செய்த கிராம மக்கள்!
Next articleஉயிரிழந்தவரை ஓட்டு போடும்படி ஓட்டு ஸ்லீப் கொடுத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!