ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

Photo of author

By Pavithra

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

தமிழக முதல்வர் அண்மையில்,தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து,அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.தற்போது கல்லூரி அரியர் தேர்வை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,தேர்வு ரத்து என்ற அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.