திமுக கனிமொழி மீது வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியை யார் கைபற்றப்போவது என்னும் பெரிய குழப்பமே ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் இன்னும் தேர்தலுக்கு 6 நாட்களே உள்ள நிலைமையில் தேர்தல் களமானது மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.அதனைத்தொடர்ந்து திமுக வினர் அனைவரும் ஆளுங்கட்சியை விமர்சித்து பரப்புரை ஆற்றி வருகின்றனர்.அந்தவகையில் முதலில் கொரோனா தொற்றை கடைபிடிக்காமல் பிரச்சாரம் செய்து திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது முதலில் வழக்கு தொடரப்பட்டது.அதனைத்தொடர்ந்து ஆ.ராசா மீது முதல்வரை அவதூராக பேசியதிற்கு 3 வழக்குகள் கீழ் போடப்பட்டது.அந்த சம்பவம் இன்றும் ஆறாத நிலையில் திமுக எம்.பி கனிமொழி மீது அடுத்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது முதலிருந்தே பல சம்பவங்களில் திமுகவினர் தனாக தன் தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்கிறது.திமுக எம்.பி கனிமொழி கோவில்பட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் அருகே அனுமதி இல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தேர்தல் அலுவலர் எம்.பி கனிமொழி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இவர் அளித்துள்ள புகாரினால் திமுக எம்.பி கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.