பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மீது வழக்கு பதிவு?

Photo of author

By CineDesk

புதுச்சேரி முன்னாள் அமைச்சரான கல்யாணசுந்தரம், புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் ஏற்பாடு செய்து இருந்த பார்ட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


இவர் பிறந்தநாளை ஒட்டி காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற அங்கு அதிகமானோர் திரண்டனர். மக்கள் கூட்டத்தினால் நோய்த் தொற்று பரவ அதிக காரணமாக அமைவதால் அமைச்சரின் மீது லாஸ்பேட்டை போலீசார் ஊரடங்கு மீறுதல், நோய் தொற்று பரவ காரணமாக எடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.