திமுக வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேனல் விசன் எனும் யூடியூப் சேனலில் தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான வீடியோ வெளியிட்டதாக மதன் ரவிச்சந்திரன் மீது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நிலத்தகராறில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் இதனை மையமாக வைத்து,அண்மையில் சேனல் விசன் எனும் யூடியூப் சேனலில் ‘கள்ளத்துப்பாக்கி கடந்த வந்த பாதை’ எனும் தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அந்த வீடியோவின் இடையில்,
திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் தற்போது தான் மனிதர்களை சுட்ட செய்தியை கேள்வி படுறேன், இதற்கு முன் நிறைய மான் வேட்டைக்கு தான் செல்வார் சனிக்கிழமை இரவு ஆச்சுனா அதை ஒரு புரோகிராமாக வச்சி வேட்டைக்கு செல்வார்,இவர் கூட நிறைய விஐபிக்கள் செல்வார்கள் மான்களை வேட்டையாடி அந்த கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் ,மாவட்ட செயலாளர் கிட்ட கொடுப்பார்கள்.ஸ்டாலினுடைய பையன் உதயநிதி ஸ்டாலின் எல்லாம் மான்கறியை விரும்பி சாப்பிடுவார் என்று எடுத்து செல்வார்கள் போன்ற செய்தி வெளியிடப்பட்டது.
இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவல்களாக இருக்கிறது மேலும்,இந்த வீடியோ எனக்கும்,என்னுடைய குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இருக்கிறது எனவே இதுபோன்ற அவதூறுகளை தடுக்கும் வகையில் விசாரணை நடத்தி மதன் ரவிச்சந்திரன்க்கு உரியதண்டனை வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.