பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

0
205
cash-equivalent-to-pongal-gift-items-action-taken-by-the-tamil-nadu-government
cash-equivalent-to-pongal-gift-items-action-taken-by-the-tamil-nadu-government

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கு. கடந்த ஆண்டு பொங்கல் அன்று 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.

அவ்வாறு பொங்கல் பரிசு வழங்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்காக எந்த தேதிகளில் யார் வந்து வாங்க வேண்டும் என டோக்கன் போல் வழங்கப்பட்டது.அந்த வகையில் நடப்பாண்டும் இது போன்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டது.ஆனால் அதற்கு அரசு உயரதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஆண்டு கொடுத்த பொருட்களில் சுகாதாரமற்ற பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.நடப்பாண்டில் பொங்கல் பரிசு பணமாக வழங்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகின்றது.முதல்வர் மு.க.ஸ்டாலின் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில்  வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleகோலியும் கடைசி இரண்டு அரையிறுதி போட்டிகளும்… வேற லெவல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ரன் மெஷின்!
Next articleBreaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!