எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லையா? இதை செய்தால் போதும் தாகம் அடங்கிவிடும்..!

Photo of author

By Priya

சிலருக்கும் இந்த பிரச்சனை அவ்வப்போது வரும். அதிக தண்ணீர் குடித்தாலும் தாகம் மட்டும் அடங்கவில்லை என்று. அதாவது தாகம் எடுக்கும், தண்ணீர் குடித்தால் வயிறு மட்டும் தான் நிறையும். ஆனால் தாகம் இருந்துக்கொண்டே இருக்கும். அதனால் தாகம் தீரும் வரை அதிக தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்போம். இது எதனால் வருகிறது? ஏன் வருகிறது? என்று பலருக்கும் சந்தேகம் வரும். இந்த தாகத்தை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தாகம் எடுப்பதற்கான காரணம்

இது போன்ற பிரச்சனைகள் எப்பொழுதும் ஏற்படாது. நமது உணவு பழக்க வழக்கங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால், மனச்சோர்வு, தூக்கமின்மை, அல்லது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் இது போல அதிக தாகம் எடுக்கும்.

இதனால் நமக்கு உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எலக்ட்ரோலைட்டுகள் தான் உடலில் உள்ள திசுக்களுக்கு ஊட்டச்சத்து கொண்டு செல்வதும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த எலக்ட்ரோலைட்டுகள் நாம் குடிக்கும் திரவங்களில் தான் நம் உடலுக்கு கிடைக்கிறது.

மேலும் கோடைக்காலங்களில் அதிக வியர்வையினால் உடலில் உள்ள நீர் வெளியேற்றப்படுவதாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிக அளவு தாகம் ஏற்படும்.

மேலும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் உள்ள நீர் அளவு குறையும். இதனால் அதிக அளவு தாகம் ஏற்படும். மேலும் முக்கியமாக இரத்தத்தில் சக்கரையின் அளவு கூடிவிட்டால் உங்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படும். இதனால் நீங்கள் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டால் சர்க்கரை அளவு கூடிவிட்டது என்று அர்த்தம்.

மேலும் புரோட்டீன் அளவு குறைவாகவும், கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக எடுத்துக்கொண்டால் தாகம் அதிக அளவில் ஏற்படும். இதனால் நாவறட்சி ஏற்பட்டு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் (over thirsty) தீராது.

தீர்வு

  • தண்ணீர் – 1 டம்ளர்
  • மேர் – 1 டம்ளர்
  • பெருங்காய தூள் – 1 பிஞ்ச்
  • உப்பு – 1 பிஞ்ச்

இவை அனைத்தையும் கலந்து குடித்து வர தீராத தாகம் தீர்ந்து விடும்.

  • வெதுவெதுப்பான நீர் -1 டம்ளர்
  • எலுமிச்சை பழம் – 1/2 பாதி

இவை இரண்டையும் சேர்த்து கலந்து குடித்து வந்தால் தாகம் தீரும்.

மேலும் படிக்க: Sodakku Thakkali: ஏழைகளின் குலாப் ஜாமுன்..!! உடம்பில் இருக்கும் அனைத்து நோய்களும் க்ளோஸ்..!!