சிபிசிஐடியின் விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்?
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் போராட்டமாக வெடித்தது.அந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணையின் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம் பேசியதாவது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வது முறையாக இல்லை என்று கூறினார்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது.அந்த மாநாட்டில் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வியை அழைத்து பாராட்டினார்கள்.மேலும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் பல கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் ஸ்ரீமதியின் தாய் செல்வி தனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என கூறுவது எந்த விதத்தில் ஞாயம் எனவும் கேள்வி எழுப்பினார்.ஸ்ரீமதி என்னுடைய மகள் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது பிறகு எதற்கு எனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டு கொச்சைப்படுத்துகின்றார்கள் எனவும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.