சி.பி.ஐ யின் அதிரடி வேட்டை! பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!
தற்போது ஆன்லைனில் வரும் ஆப்கள் மூலம் தான் பண மோசடி நடந்து வருகின்றது.ஆன்லைனில் வரும் லோன் ஆப் பயன்படுத்தி பலரும் கடன் பெற்று வருகின்றனர்.அவ்வாறான ஆப்களை இன்ஸ்டால் செய்து கடன் பெற்றால் அந்த ஆப் மூலம் நம்முடைய போன்னை ஹேக் செய்து விடுகின்றனர்.விஜய் தொலைகாட்சியில் பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லட்சுமி வாசுதேவன்.இவர் தில்லாலங்கடி ,555 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய செல்போன்னிற்கு சமீபத்தில் ரூ ஐந்து லட்சம் பரிசு வந்துள்ளது என குறுஞ்செய்தி வந்துள்ளது.அந்த ஐந்து லட்சத்தை பெற வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததும் அவருடைய போன் ஹக் செய்யப்பட்டது.இதனையடுத்து தற்போது இணையதளத்தை பயன்படுத்தி இந்தியாவில் நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சர்வதேச இணையதள குற்றவாளிகளின் கட்டமைப்பை தகர்த்தெறிய ஆபரேஷன் சக்ரா என்ற அதிரடி வேட்டையை சி.பி.ஐ நடத்தி வருகின்றது.
இன்டர்போல் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எம்.பி.ஐ ஆஸ்திரேலிய,கனடா போலீசார் அளித்த தகவலின் படி நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.மாநில போலீசார்ருடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையில் இணையதளத்தில் மோசடி செய்தவர்களில் 26 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் கர்நாடக போலீசார் 16 பேரையும் ,டெல்லி போலீசார் 7 பேரையும்,அந்தமான் போலீசார் ஒருவரையும் கைது செய்துள்ளனர் என சி.பி.ஐ தெரிவித்துள்ளனர்.