ஆம் ஆத்மியிலிருந்து விலகினால் முதல்வர் பதவி! ஆசை காட்டும் பாஜக மசியாத மனிஷ் சிசோடியா!

Photo of author

By Sakthi

டெல்லியில் மதுபான கொள்கையை வெளியிட்டதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது குறித்து மாநில துணை முதல்வரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மனீஷ்சிசோடியாவிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை செய்தனர்.

சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறினால் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் இல்லாவிட்டால் இது போன்ற வழக்குகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இருந்தாலும் பாஜகவிற்காக ஆமாட்மையில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மணிஷ் சிசோயாவின் இந்த குற்றச்சாட்டை சிபிஐ முற்றிலுமாக மறுத்துள்ளது. சிசேரியாவிடம் சட்ட ரீதியாகவும், தொழில் முறை படியுமே விசாரணை நடத்தப்பட்டதாகவும், சட்டப்படி விசாரணை நடைபெறும் எனவும் விளக்கமளித்துள்ளது சிபிஐ தரப்பு