ஆபரேஷன் லோட்டஸ் 75 அதிரடி காட்டும் பாஜக! அலறும் திமுக!

0
91

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் தமிழகத்தில் மத்திய அரசின் திட்ட பணிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் அதில் நடைபெறும் ஊழல்களை கண்டுபிடிக்கவும் தமிழக பாஜக சார்பாக ஆபரேஷன் லோட்டஸ் 75 என்ற திட்டம் தீவிரமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் படி மாவட்ட வாரியாக அதிரடி சோதனைகளை நடத்தி திமுக அரசுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நெருக்கடி கொடுக்கவும் டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிடுவது அல்லது பாஜக தலைமையில் திமுக அதிமுக அல்லாத மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து முன்னுரை போட்டியை ஏற்படுத்துவது என்று இரண்டு திட்டங்களை பாஜக மேலிடம் கையில் வைத்திருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி திமுக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக ஆபரேஷன் லோட்டஸ் 75 என்ற திட்டத்தையும் பாஜக முன்னெடுத்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதத்தில் மத்திய அமைச்சர்கள் 75 பேர் தமிழகத்திற்கு ஒரு மாதத்தில் வரவிருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அந்த கட்சியின் சார்பாக நடைபெற்ற ஒரு விழாவில் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் 75 மத்திய அமைச்சர்கள் பங்குபெறும் ஆபரேஷன் லோட்டஸ் 75 என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மீது பாஜக மேலிடம் சிறப்பு கவனம் செலுத்த துவங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பாஜகவிற்கு இடையே கடுமையான போட்டி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் தற்போதுள்ள நான்கு சட்டசபை உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை 40 அல்லது 50 ஆக அதிகரித்தால், பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும்.

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். இதற்கான அடித்தளம் அமைப்பதற்காகவே மத்திய அமைச்சர்களின் பணிகள் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

லஞ்சம் வழங்காமல் மத்திய அரசின் ஜல் சக்தி திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு கிடைக்கிறதா? விவசாயிகளுக்கான 6000 ரூபாய் நிதி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2.75 லட்சம் ரூபாய் நிதி முறையாக கிடைக்கிறதா? பிரதமர் காப்பீடு திட்டம் தனியார் மருத்துவமனைகளில் ஏற்கப்படுகிறதா?

நியாய விலை கடைகளில் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியம் பொருட்கள் சரிவர கிடைக்கப் பெறுகிறதா? உட்பட மத்திய அரசின் 20 அம்ச திட்டங்கள் நேரடியாக தமிழக பயனாளிகளுக்கு கிடைத்திருக்கிறதா? என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளில் மத்திய அமைச்சர்கள் கணக்கெடுக்கும் பணிகளை ஏற்கனவே துவங்கி விட்டார்கள்.

இதுவரையிலும் தமிழ்நாட்டில் 25 மத்திய அமைச்சர்கள் வேலூர், தர்மபுரி, நாமக்கல், அரியலூர், உட்பட 20க்கும் அதிகமான மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாமிட்டு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் முறைகேடாக திட்டங்களை செயல்படுத்திய துறை அதிகாரிகள் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியும் திமுக அரசுக்கு மத்திய அமைச்சர்கள் மூலமாக வழங்குவதற்கு டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் கோயம்புத்தூருக்கு வருகை தந்த உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வு திட்டத்தில் மத்திய அரசின் நிதி சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? முறைகேடு நடைபெற்றுள்ளதா என்று ஆய்வு பூனைகளை மேற்கொண்டது ஆட்சியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பாஜகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.