CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
அதனால் 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து இந்த தேர்வுகளை மீண்டும் மே மாதம் நடத்த CBSE திட்டமிட்டிருந்தது. ஆனால், மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தேர்வுகள் நடத்துவது தொடர்பாகCBSE கடந்த தேதியை 15ம் தேதி சிப்ஸ் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் CBSE தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை CBSE எச்சரித்துள்ளது. CBSE அதிகாரி என்ற போர்வையில் சிலர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பாடங்களில் கூடுதல் மதிப்பெண் பெற்று தர உதவி செய்வதாக அணுகுவதாக தங்களுக்கு புகார் வந்துள்ளதாகவும், அப்படிபட்ட மோசடி ஆசாமிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் CBSE தெரிவித்துள்ளது.
அதுபோன்று யாரேனும் அணுகினால் அவர்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் CBSE வேண்டுகோள் விடுத்துள்ளது.