ஒடிசா மாநிலத்தில் மின்சாரம் விநியோகிக்கும் மூன்று நிறுவனங்களின் பங்குகளை டாட்டா நிறுவனம் பெறுவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வெஸ்டர்ன் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஓடிசா, சதர்ன் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஓடிசா மற்றும் சென்ட்ரல் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஒடிசா ஆகிய 3 நிறுவனங்களின் தலா 51% பங்குகளை டாட்டா பவர் கம்பெனி பெறுவதற்கு போட்டியில் சட்டம் 2002, பிரிவு 31 (1) இன் கீழ் இந்திய போட்டியில் ஆணையகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மின்சாரச் சட்டம் 2003, பிரிவு 20 இன் கீழ் ஒடிசா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரத்தியேக ஏல நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஒடிசா தொகுப்புக் கழகத்திடம் இருந்து ஒவ்வொரு நிறுவனத்தின் 51% பங்குகளை டாட்டா நிறுவனம் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.