அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் சூறையாடும் சிசிடிவி காட்சி  வெளியீடு!!

Photo of author

By Savitha

அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் சூறையாடும் சிசிடிவி காட்சி  வெளியீடு!!

புதுச்சேரியில் அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை இளைஞர்கள் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர், சுல்தான்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது அரசு கூட்டுறவிற்கு சொந்தமான பெட்ரோல் பங்க், இங்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் நிரப்புவதில் அவர்களுக்கும் பங்கின் ஊழியர் சதிஷ்க்கும் ஏற்பட்ட தகராறில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் ஊழியரை தாக்குவதும் பின்னர் பங்கின் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வெளியே வரும் அவர்கள் பங்கில் உள்ள பொருட்களை சூறையாடி விட்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் இது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த இருவரும் வில்லியனூர் கனுவாபேட் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.