டிடிவி. தினகரன் தொகுதி மாறியதன் ரகசியம் என்னவென்று தெரியுமா?

Photo of author

By Sakthi

வரும் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் அதற்கான தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன அதன்படி முதலமைச்சர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதில் நேற்றைய தின சிறப்பம்சம் என்னவென்றால், நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வாக்கு சேகரித்தார். இது தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் ஆளும் மற்றும் அரசியல் நோக்கர்கள் ஆளும் உற்று நோக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆன டிடிவி தினகரன் இந்த முறை ஆர்கே நகர் தொகுதி கைகழுவிவிட்டு கோவில்பட்டி தொகுதியில் களம் இறங்க இருக்கிறார்.அதே தொகுதியில் தான் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு களமிறங்குகிறார்.


ஒரு அமைச்சரை எதிர்த்து இவ்வளவு தைரியமாக எந்த விஷயத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் களமிறங்குகிறார் என்று விசாரணை செய்தால் அங்கே கள்ளர் இன மக்களின் ஓட்டுக்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. டிடிவி தினகரன் ஒரே கள்ளர் இனத்தை சார்ந்த நபர் என்ற காரணத்தால், அந்த தொகுதியை டிடிவி தினகரன் தேர்ந்தெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு அவர் சென்ற முறை சட்டசபை உறுப்பினராக இருந்த ஆர்கே நகர் தொகுதிக்கு அவர் பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை என்ற காரணத்தால், அந்த பகுதியில் இருக்கின்ற மக்களிடையே டிடிவிக்கு எதிரான அலை பெரிய அளவில் வீசிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த முறை அந்த தொகுதியை கை கழுவி விட்டு தன் சொந்த சமூக மக்கள் இருக்கும் தொகுதியாக பார்த்து களமிறங்குகிறார் டிடிவி தினகரன் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆதரிக்கும் விதமாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி அவர்கள் பிரச்சாரம் செய்திருக்கிறார். பிரச்சாரத்துக்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சமயத்தில் தெரிவித்ததாவது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக, நாள்தோறும் பொய்களை தெரிவித்து வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

உண்மையிலேயே ஸ்டாலின் ஆத்திகரா இல்லை நாத்திகரா என்பது குறித்து பொதுமக்களிடம் விளக்கி தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்து மத கடவுள்களை மட்டும் அவர் தொடர்ச்சியாக இழிவு செய்து பேசுகிறார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை மற்றும் நீட்தேர்வு இவற்றையெல்லாம் காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் திமுக ஆதரித்து கொண்டுவந்தது. தமிழக மக்கள் முன்னேற வேண்டுமென்றால் அது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி என்ற இரட்டை எஞ்சின்களால் மட்டுமே சாத்தியமாகும். மின்வெட்டு கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு போன்ற அவலங்கள் உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் திமுகவிற்கு தாராளமாக வாக்களிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் சிடி.ரவி.

அதோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தொடர்பாக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா தெரிவித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்கள் தொடர்பாக இவ்வாறு தவறான கருத்துக்களை தெரிவிப்பது திமுகவின் டிஎன்ஏவிலேயே உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.

 

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. உங்களுக்கு மக்கள் கதாநாயகன் வேண்டுமென்றால் இந்த மண்ணில் வானதி சீனிவாசனுக்கு நாட்களில் எங்கள் துக்கடா அரசியல்வாதி வானதி ஸ்ரீனிவாசன் என்ற மக்கள் நீதி மையம் கட்சியின் கருத்து அந்த கட்சியின் அரசியல் பக்குவம் இன்மையை உணர்த்துகிறது என்று தெரிவித்திருக்கிறார். பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி.