தமிழ் முன்னணி நடிகை ‘கீர்த்தி சுரேஷின் திருமணம் டிசம்பர் 12ஆம் தேதி கோலகலமாக நடைபெற்றது’. இவர் இவரது 15 வருட காதலரை திருமணம் செய்து கொண்டார். இளைஞர்களின் சொர்க்க பூமியான கோவாவில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. பலபிரபகங்கள் கலந்து கொண்ட நிலையில், நண்பர்களுடன் இணைந்து இருந்த போட்டோவை ஷேர் செய்த ‘இளைய தளபதி விஜய் நண்பிக்கும், நண்பாக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்’. கீர்த்தி சுரேஷும், ‘விஜய் மற்றும் தனது கணவருடன் இணைந்த போட்டோவை வலைதளத்தில் ஷேர் செய்து எங்களுடைய ட்ரீம் ஐகான் எங்களை நேரில் வந்து வாழ்த்தியுள்ளார்’ என ஷேர் செய்து இருந்தார்.
பிரபல இயக்குனர் ‘மாரி செல்வராஜ்’ இவர்கள் புகைப்படத்தை வலைதளங்களில் ஷேர் செய்து இந்த தருணத்திற்காக “நீங்கள் நீண்ட காலம் காத்திருந்தீர்கள். இது இப்போது நிறைவேறிவிட்டது. உங்களின் இந்த திருமணம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பு எல்லா மகிழ்ச்சியாலும், கொண்டாட்டங்களாலும் நிரப்பப்படும்” என மனதார வாழ்த்தி உள்ளார்.
பிரபல நடிகர் ‘சூரியும்’ திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்து ‘என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை மணவாழ்வானது மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி அழகான நினைவுகள் நிறைந்ததாய் அமைய வேண்டும்’ என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இது அனைவராலும் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.