பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு!

0
63
Celebrity director arrested Series of excitement in Tamil cinema!
Celebrity director arrested Series of excitement in Tamil cinema!

பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு!

1992 ஆம் ஆண்டு முன்பு குறிஞ்சாங்குளம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே சாதி வெறி தாக்குதல் நடைபெற்றது. இது தமிழகத்தையே புரட்டிப் போடும் சம்பவமாக இருந்தது. குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினர் ஒரு மண்டபம் ஒன்று நடத்தி வந்தனர். அதற்கு எதிரே தலித் என்கிற ஆதி தமிழர்கள் காந்தாரி அம்மன் கோவில் ஒன்றை கட்ட முன்வந்தனர். எங்கள் மண்டபத்திற்கு முன்பே இப்படி தலித்துகள் கோவில் கட்டுவதா என்று சாதிவெறி எடுத்து அந்த நாயக்கர்கள் தலித் ஆதித்தமிழர்கள் நான்கு பேரை வெட்டிக் கொன்றனர். இந்த சாதிவெறி தாக்குதலானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குறிஞ்சான்குளம் வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு பல காரணங்களால் இந்த வழக்கு இருக்கும் இடம் தெரியாமல் போனது.அந்த இருபத்தி ஆறு பேரும் வெளியேறினர். இது ஆதி தமிழர்கள் மற்றும் நாயகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் சாதி படுகொலையை தாண்டி இனப்படுகொலை என்றும் கூறினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வருடம்தோறும் நிகழ்ச்சி நடைபெறும்.இதில் பலர் பலியானார். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளத்தில் நடைபெறும்.

அவ்வாறு நடைபெறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏதேனும் விபரீதங்கள் நடக்காமல் இருக்க தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஏழு நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தென்காசி மற்றும் சங்கரன்கோவில் மாவட்ட கோட்டாட்சி தலைவர் பழனி குமார் கூறியுள்ளார். இவர் அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் இயக்குனர் கௌதமன் அத்துமீறி உள்ளே வந்துள்ளார். அதனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் வந்த 13 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.