#CelebrityDiwali: இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்!
தேசிய அளவில் கொண்டாட கூடிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்று. குறிப்பாக தீபாவளி பண்டிகை இந்தியா முழுக்க கொண்டாட கூடிய மிக்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். அந்த வகையில் நாடு முழுவதும் மக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது வரும் 24 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகையிலும் அந்த ஆண்டு திருமணமான புதுமண தம்பதிகளுக்கு தலைத் தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட பல முக்கிய பாலிவுட் பிரபலங்கள் தலைத் தீபாவளியை கொண்டாட உள்ளனர். இவர்கள் அனைவரும் வருகின்ற தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாட காத்திருக்கிறாரகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் யாரெல்லாம் இந்த ஆண்டு தலைத் தீபாவளியை கொண்டாட உள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்.
Ranbir Kapoor And Alia Bhatt [Image Source: Google]
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்
பாலிவுட்டின் மிகவும் பிரபல ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், இந்த ஆண்டு ஏப்ரல்-14 அன்று குடும்பம், நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். சில, ஆண்டுகளாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்த பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். திருமணத்திற்குப் பிறகு அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும், வருகின்ற தலை தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

மோஹித் ரெய்னா மற்றும் அதிதி ஷர்மா
நடிகர் மோஹித் ரெய்னா தனது நீண்ட நாள் காதலியான அதிதி ஷர்மாவை இந்த ஆண்டு, ஜனவரி 1 அன்று திருமணம் செய்துகொண்டு, “திருமண முடிச்சு போடுவது திடீர் முடிவு” என்று திருமண அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி புத்தாண்டை கொண்டாடினார். இவர்கள் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட காத்திருக்கிறார்கள்.

சூரஜ் நம்பியார் மற்றும் மௌனி ராய்
சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட பாலிவுட் நடிகை மௌனி ராய் 2021-ல் தனது ரசிகர்களுக்கு தன் காதர் சூரஜ் நம்பியாரை காதலிப்பதாகவும் இறுதியாக, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியாருடன் ஜனவரி-27 அன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இந்த ஆண்டு தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

கரிஷ்மா தன்னா மற்றும் வருண் பங்கேரா
பாலிவுட் தொலைக்காட்சி நடிகையான கரிஷ்மா தன்னாவின் திருமணம் பிப்ரவரி-5 அன்று தனது நீண்ட நாள் காதலரான வருண் பங்கேராவை மணந்து கொண்டார். 2021-ல் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இந்த ஜோடி, தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமண செய்து கொண்டனர். இவர்களும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

லவ் ரஞ்சன் மற்றும் அலிஷா வைட்
பிரபல பாலிவுட் இயக்குனர் லவ் ரஞ்சன் தனது நீண்ட நாள் காதலியான அலிஷா வைத் என்பவரை ஆக்ராவில் பிப்ரவரி 20 அன்று திருமணம் செய்து கொண்டார். சில காதல் நகைச்சுவை படங்களின் போது, இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதலை ரகசியமாக வைத்துள்ளனர். இறுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்படத்தக்கது. இப்பொழுது, இவர்களும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட காத்திருக்கிறார்கள்.