சர்வைவர் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் பிரபல தொலைக்காட்சி!! பெரும் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!

Photo of author

By CineDesk

சர்வைவர் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் பிரபல தொலைக்காட்சி!! பெரும் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!

CineDesk

Celebrity TV broadcasts the Survivor show !! Great looking fans !!

சர்வைவர் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் பிரபல தொலைக்காட்சி!! பெரும் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!

தமிழ் தொலைக்காட்சி துறைகளில் தற்போது பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி ஜீ தமிழ். ஜீ தமிழ் என்பது என்டர்டைன்மென்ட் என்டர்பிரைஸ்க்கு சொந்தமான ஒரு இந்திய தமிழ் மொழி பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இந்த தொலைக்காட்சி சேனல் 2008 இல் ஒளிபரப்பாக தொடங்கியது. இது சர்வதேச அளவில் உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சி சென்னையில் உள்ள கிண்டியில் இருந்து ஒளிபரப்பப்படுகிறது. ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைஸ் 2020 ஆம் ஆண்டில் ஜீ திறை என்ற முழு நேர திரைப்பட சேனலையும் அறிமுகப்படுத்தியது.

மேலும் ஜீ தமிழில் பல ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகம் செய்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது புகழ்பெற்ற சர்வைவர் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வைவர் நிகழ்ச்சி என்பதையும் வெளிநாடுகளில் பிரபலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே நூறு நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக ஆளில்லாத தனித்தீவு போட்டியாளர்களை தங்க வைப்பார்கள். மேலும் அது 100 நாட்கள் நடைபெறும். 100 நாட்களுக்குப் பிறகு தாக்குப் பிடிக்கும் போட்டியாளரை வெற்றி பெற்றவராக அறிவிப்பார்.

இந்த பிரபல நிகழ்ச்சியை தற்பொழுது ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்பு ஜீ தொலைக்காட்சி ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஜீ தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியைப் பற்றிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் சர்வைவர் கம்மிங் சூன் என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும் இதைப் பற்றிய வேறு எந்த ஒரு தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்த சர்வைவர் நிகழ்ச்சிக்கு தற்போது மக்களிடையே பெருமளவு எதிர்பார்ப்பு இருக்கும் என நம்பப்படுகிறது.