சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம்தான் புறநானூறு. இப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் சூர்யா இப்படத்தை விட்டு விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான இப்பொழுது சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷின் கூட்டணியில் இப்படம் வெளிவர இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியது. ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியானதே தவிர படம் இன்று வரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, மலையாளத் திரை உலகின் கதாநாயகி நஸ்ரியா மற்றும் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் தற்பொழுது இந்த நிலையானது முற்றிலுமாக மாறியுள்ளது.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்றவாறு இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியதை தொடர்ந்து அவருடன் நடிக்க இருந்த பிரபலங்கள் ஒவ்வொருவராக இப்படத்தை விட்டு விலகி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் உடன் எப்படி நடிப்பதென யோசித்து இந்த முடிவை எடுத்தார்களா அல்லது இதற்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
ஆனால் எதையும் கண்டுகொள்ளாத பட குழு புதிய டீமுடன் புறநானூறு படம் டெஸ்ட் ஷூட்டிங் வெற்றிகரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெளியான செய்திகளின்படி சிவகார்த்திகேயன் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து விஜய் வருமா கேரக்டரில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கிறார் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை நஸ்ரியாவிற்கு பதிலாக ஸ்ரீலீலா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.