செல்போனால் நேர்ந்த விபரீதம்!  பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Photo of author

By Amutha

செல்போனால் நேர்ந்த விபரீதம்!  பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

செல்போனில் பேசிக்கொண்டு சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிறைவேறியுள்ளது.

தாம்பரம் அருகே போன் பேசிக்கொண்டு சென்ற மாணவி தண்டவாளத்தை கடக்க முயலுகையில் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் நிகிதா வயது 18. இவர் தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவி நிகிதா கல்லூரியில் படித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தாம்பரம் ரயில்வே நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதனால் அவர் அழைப்பை ஏற்று பேசிக்கொண்டே ரயில் தண்டவளத்தை கடக்க முயற்சித்துள்ளார்.

போன் பேசும் முனைப்பில் அவர் தண்டவாளத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டே கடக்கும் பொழுது தாம்பரத்திலிருந்து வண்டலூர் நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் அவர் மீது வேகமாக மோதியது.  வெயில் மோதியதில் நிகிதா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விருந்த தாம்பரம் போலீசார் நிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போனில் பேசிக்கொண்டு அஜாக்கிரதையாக கடந்ததால் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.