திருப்பூரில் நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத 80 அடி உயரமுள்ள செல் டவர் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் அருகே நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகவும் பழுதடைந்த நிலையில் செல்போன் டவர் ஒன்று இருந்தது. அந்த சாலையில் தினமும் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத போது திடீரென அந்த செல்போன் டவர் சாலையில் சரிந்து விழுந்தது விபத்திற்க்குள்ளானது.
இதனால் சாலையில் அவ்வழியாக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியது. இதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ராங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த செங்கிஸ்கான்(52) என்பவர் படுகாயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு காரும் இந்த விபத்தில் சிக்கி சேதமடைந்தது. விபத்து காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் செங்கிஸ்கானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்தோடு செல்போன் தவறையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கடந்த 22ம் தேதியும் இதேபோல் ஒரு செல்போன் டவர் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. திருப்பூர் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத செல்போன் டவர்கள் கீழே விழுவது தொடர்ந்து வருகிறது என மக்கள் குற்றம் சுமர்த்துகிறார்கள்.