இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

0
222
Cell phone use is prohibited in this place! The management gave a check to the employees!
Cell phone use is prohibited in this place! The management gave a check to the employees!

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினம்தோறும் ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.அதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறப்படுகின்றது.

அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளிநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் வரும் 16 ஆம் தேதி முதல் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். ஊழியர்கள் அதற்கென உள்ள இடத்தில் செல்போன்களை வைத்து விட்டு செல்ல வேண்டும் எனவும் பணி முடிந்து செல்லும் பொழுது செல்போனை எடுத்துக்கொள்ளாலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் எய்ம்ஸ் வளாகத்துக்குள் நோயாளிகளும் அவர்களின் உதவியாளர்களும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காக போதிய போக்குவரத்து வசதி இல்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் ஏற்கனவே உள்ள பேருந்து வசதியுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்குமாறு 50 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Previous articleஅரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர் மருத்துவமனைகளில் ஆய்வு!
Next articleதிராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!!