மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்??

Photo of author

By Rupa

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்??

Rupa

Central and State Govt Mental Health Insurance Scheme!! Who benefits and how to get it??

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்??

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் சமமாக நடத்தப்படும் வகையில் இந்திய சட்டப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பிரிவு 21 (4) யின் படி கூறியுள்ளனர்.பிறக்கும் போதே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு என்பது ஏதுமில்லை. இதற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு மற்றும் அவர்களின் சரியான தரவுகள் இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். 2007 ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசால் உடல்நல காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அராசாங்கத்தின்  காப்பீடு இருப்பினும் சிலருக்கு அது பயனற்றதாகவே காணப்படுகிறது. ஏனென்றால் உங்களுக்கு  ஏதேனும் நோய் இருப்பின் அதுவோட மனநலம் பாதிக்கப்பட்டால் அது காப்பீடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவே பிறவியிலிருந்தே மனநல நோயால் பாதிக்கப்பட்டால் அது காப்பீடு எடுத்துக் கொள்ளப்படாது. இது ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் வேதனையை அளிக்கிறது. அதனையடுத்து 1987 ஆம் ஆண்டு இருந்த மனநல சட்டத்தை நீக்கி, புதிதாக மனநல சட்டம் 2017 என்பதை இயற்றினர். இதனின் தலையாய கடமையாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பது மற்றும் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பதே. மேலும் இதில் பல புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த வரிசையில் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும்  சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டமும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு காப்பீடு திட்டம் கொண்டு வந்ததன் காரணமாக பலர் ஆதரவற்ற நிலையில் விடாமல் இருப்பதற்கு வழிவகை செய்துள்ளது.