பணியாளர் தேர்வாணையமானது காலியாக உள்ள மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.இப்பணிக்கு மொத்தம் 40000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தகுதி விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: மத்திய அரசு பணி
நிறுவனம்: பணியாளர் தேர்வாணையயம்
பணி: மத்திய ஆயுதக் காவல் படை
காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 40000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
மத்திய ஆயுதக் காவல் படையில் பணி புரிய விருப்பம் இருப்பவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
18 முதல் 23 வயதிற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
ஊதிய விவரம்:
மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
*எழுத்து தேர்வு
*சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கு வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.