BREAKING மத்திய குற்றப்பிரிவிடம் வசமாக சிக்கிய ஆ.ராசா! உச்சகட்ட ஷாக்கில் ஸ்டாலின்!

0
97
Rasa
Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுகவின் கோட்டை என மார்த்தட்டிக்கொள்ளப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் குஷ்பு களமிறங்குகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுவது அனைவரும் அறிந்த செய்தி.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலனுக்கு ஆதரவாக நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த குழந்தை.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என படு கொச்சையாக பேசினார்.

ஆ.ராசாவின் ஆபாச பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் பல்வேறு காவல்நிலையங்களில் எச்.ராஜா மீது அதிமுகவினர் புகார் அளித்து வருகின்றனர். அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில், “கடந்த 26ம் தேதி பிரச்சாரத்தில் பேசிய ஆ.ராசா, முதலமைச்சரை அவமதிக்கும் விதமாக பேசியது மக்கள் மனதை புண்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே முதல்வர், துணை முதல்வரை அவமதிக்கும் விதமாக பிரச்சாரங்களில் பேசி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்தும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசா மீது தேர்தல் விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவர் இனி வரும் காலங்களில் எந்த விதமான தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட கூடாது என நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆ.ராசாவிற்கு எதிரான உருவ பொம்மை எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் அதிகரித்து வந்ததாலும், கண்டன குரல்கள் வலுத்து வந்ததாலும் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயிரம் விளக்கில் ஆ.ராசா பேசிய வீடியோவை ஆதாரமாக கொண்டு ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
CineDesk