வாடகை கட்டிடத்தில் தொடங்கவிருக்கும் மதுரை எய்ம்ஸ்!

0
159
Central goverments decides to run AIIMS OP in rent building

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக மத்திய அரசு பல வருடங்களாக கூறி வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுப் பணி கூட நடந்தது.

டெல்லி எய்ம்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய புகழ்பெற்ற மருத்துவமனை ஆகும். டெல்லி எய்ம்ஸ் போலவே தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்ட எல்லா பணிகளும் ஆயத்தமாயின. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் பற்றி எந்த தகவலும் இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் MLA வும் ஆனா உதயநிதி ஸ்டாலினும், திமுக கட்சியும் பலமுறை இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் மதுரையில்அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகின்றது, சென்னை மற்றும் கோவையில் மட்டுமே 100க்கும் அதிகமாக உள்ளது.

மதுரை எய்ம்ஸ் பற்றி அவர் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் குறித்து முதலமைச்சரும் வலியுறுத்தி வருகின்றார். இது குறித்து மத்தியஅரசு ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைத்துள்ளது. இந்த குழு 20ந் தேதி ஆலோசனைக்கூட்டம் நடத்தும்.

தற்போது புறநோயாளிகள் பிரிவை மட்டும் வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்தியஅரசு முடிவு செய்து உள்ளது, இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்படும் எனக் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Previous articleமனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்
Next articleசபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை