கொரோனா பரவலால் இந்தியாவில் நிதிபற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கிட 14 மாவட்டங்களுக்கு ரூ.6195 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது.
இன் நிதியானது 15 -ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி,14 மாவட்ட மாநிலங்களுக்கு ரூபாய் 6195 கோடியை ஆகஸ்ட் 11, 2020 மாத வருவாய் பற்றாக்குறை நிதிக்காக அன்று மத்திய அரசு அறிவித்தது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இது கூடுதல் நிதி உதவியாக இருக்கும் என மத்திய அரசு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலக கட்டுரையில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு,கேரளம், ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம்,நாகாலாந்து, மணிப்பூா், மேகாலயம், உத்தரகண்ட்,மிஸோரம், பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த நிதித் தொகையை பெறுகின்றன.
இதற்கு முன், கடந்த ஏப்ரல்-ஜூலை மாத காலகட்டத்திலும் இதே அளவு தொகையை மத்திய அரசு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.