ஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.!

0
139

ஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.!

மத்திய அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களுக்கு தற்பொழுது ரூபாய். 6,195 கோடியை மத்திய அரசு நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு ஆறாவது தவணையாக ரூபாய்.335.41 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முறை நிதி ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக கேரளா மாநிலத்திற்கு ரூபாய்.1,276.91கோடி ரூபாய் தொகையை ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிதி ஒதுக்கீடானது கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்களில் அதிகமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசின் உதவும் வகையில் மாநில அரசுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது மத்திய அரசு 14 மாவட்டங்களுக்கு ரூ.6,195 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Previous articleவிவசாய மின் இணைப்பை எங்குவேண்டுமானாலும் மாற்றுவது எப்படி?
Next articleதண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம்