நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: மத்திய அரசு வேலை
நிறுவனம்: ஊக்கமருந்து சோதனை ஆய்வகம்
பணி: டெக்னிக்கல் உதவியாளர்(Technical Assistant)
காலிப்பணியிடங்கள்: Technical Assistant பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிட அறிவிப்பு
வெளியாகி இருக்கின்றது.
கல்வித் தகுதி:
Technical Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய உள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் மருந்தாக அறிவியல்,மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்,உயிரியல் போன்ற பாடப் பிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம்:
Technical Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.1,12,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ.1000/-
இதர பிரிவினருக்கு ரூ.500/-
விண்ணப்பம் செய்யும் முறை: ஆன்லைன் வழி
Technical Assistant பணிக்கு தகுதி இருப்பவர்கள் www.ndtlindia.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26/05/2025