இந்த புதிய ஆண்டில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியினை வெளியிடவுள்ளது, அதாவது வரும் மார்ச் மாதத்தில் ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் பேக்டர் உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளம் கணிசகமாக உயர்ந்துவிடும், நீண்ட காலமாகவே ஊழியர்கள் தங்களது ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த வேண்டும் என்று போராடி வரும் நிலையில் இது நடந்தால் அவர்களுக்கு மிகப்பெரியளவில் சந்தோசம் கிடைக்கும்.
இந்த ஆண்டு மார்ச் மாத வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு அரசாங்கம் ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஃபிட்மென்ட் பேக்டர் உயர்வு பற்றி அரசு தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 7வது ஊதியக் குழுவின் கீழ், தற்போது மத்திய ஊழியர்களுக்கு 2.57 சதவீத ஃபிட்மென்ட் காரணியின் படி சம்பளம் வழங்கப்படுகிறது, அதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கைப்படி ஃபிட்மென்ட் காரணி 2.57ல் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும்.
ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்தினால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக இருக்கும். தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 என்றால், அலவன்ஸைத் தவிர்த்து 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) கிடைக்கும். இப்போது ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால் உங்கள் சம்பளம் ரூ 95,680 (26000X3.68 = 95,680) ஆக உயரும்.