மத்திய அரசு: இனி இந்த இணையத்தில் அந்த வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்! தடை செய்யப்பட்ட செயலி மீண்டும் செயல்பட அனுமதி!
இந்தியாவில் பாதுகாப்பற்ற முறையில் ஏதேனும் இணையதளம் செயல்பட்டு வந்தால் அதனை ரத்து செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பெரும்பாலான மக்கள் உபயோகித்து வந்த விஎல்சி மீடியா பிளேயரை இந்திய அரசு தடை செய்தது. இந்த வருடத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இந்த இணையத்தை முடக்கியது.
இந்த இணையத்தில் உள்ள தரவுகளை சீனா ஹேக் செய்து வருவதாக பல புகார்கள் வந்தது. இவ்வாறு தரவுகள் திருடுபடுவது குறித்து இந்திய அரசு, இந்த இணையத்தை முடக்கியது. ஆனால் விஎல்சி மீடியா பிளேயரை உருவாக்கிய வீடியோ லேன் நிறுவனம் இவ்வாறு எந்த ஒரு நாடும் தரவுகளை ஹேக் செய்யவில்லை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
ஆனால் முதலில் இந்த செயலியை முடக்கியதற்கு இந்திய அரசு எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. நாளடைவில் தான் அதற்கான காரணத்தை தெரிவித்தது. இது குறித்து தெளிவான விளக்கத்தை வீடியோ லேன் நிறுவனம் வெளியிட்டுள்ளது, அதில், ப்ளே ஸ்டோரில் பிஎல்சி மீடியா பிளேயர் போலவே இருக்கும் வேறொரு செயலியை தான் ஹாக் செய்ய முயற்சி செய்து உள்ளனர்.
ஆனால் பிஎல்சி மீடியா பிளேயரை ஹேக் செய்யவில்லை எனக் கூறினர். கடந்த 9 மாதங்களாக இது குறித்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் வி.எல்.சி இணையதளம் செயல்படுவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வழக்கம்போல் நாம் இதனை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.