ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?

Photo of author

By Savitha

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?

பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றது முதல் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

தமிழ் மொழி 2000 ஆண்டுகள் பழமையானது என ஐநா சபை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோதி உலகின் மிகத் தொன்மையான மொழி இந்தியாவில் இருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம் என பல்வேறு கூட்டங்களில் பிரதமர் மோதி ப்லவேறு தருணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுப்பிரமணிய பாரதி,திருவள்ளுவரின் திருக்குறள்,அகநானூறு பொன்ற தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றையும் தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு கூட்டங்களில் பிரதமர் மோதி மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் மொழியின் மீது பிரதமர் மோதிக்கு உள்ள ஈடுபாட்டின் காரணமாக இதன் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் தமிழ் மொழியை பரப்பும் வகையில் ஹிந்தி பிரச்சார சபாவை போல தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி மொழியை பரப்பும் வகையில் கடந்த 1918 ம் ஆண்டு மகாத்மா காந்தியால் ஹிந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டது.

மத்திய அரசின் நிதி உதவியுடன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் ஹிந்தி பிரச்சார சபா தமிழகத்தில் திருச்சி கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் யோசனையின் பேரில் வட மாநிலங்களில் தமிழ் மொழியை பரப்பும் வகையில் தமிழ் பிரச்சார சபா ஒன்றை அமைக்க மத்திய கல்வி அமைச்சர் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்ட வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் பிரச்சார சபாவின் மூலம் தமிழ் மொழி சார்ந்த பல்வேறு பட்டய் மற்றும் பட்டய படிப்புகள் சான்றிதழ் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதி இதற்கான பணிகளை துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் பிரச்சார சபா அமைக்கப்படும் பட்சத்தில் அதுவும் சில குறிப்பிட்ட நிறுவனங்களைப் போல தன்னாட்சி அமைப்புடன் கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பண்டைய வரலாற்று மற்றும் கலாச்சார பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக இதே கல்வி அமைச்சகத்தின் சார்பில் அண்மையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காஷி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு பிரதமர் மோதி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“லுல் சவுத்” என்ற கொள்கையின் அடிப்படையில் அண்மைக்காலமாக தமிழ்நாடு கேரளா ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது பாரதிய ஜனதா.

பாஜக தமிழ் மொழிக்கு எதிரான கட்சி என்றும் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் “தமிழ் பிரச்சார” அமைக்கப்பட்டால் தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு அது மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.