மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை நாட்டு மக்களுக்காக தொடங்கி வைத்தது.இது ஒரு மாதாந்திர ஓய்வூதிய திட்டமாகும்.இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும் என்பதால் நாட்டு மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்திய குடிமகன்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.18 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.இத்திட்டத்தில் சேர்ந்த பிறகு ஒவ்வொரு மாததமும் ரூ.210 செலுத்த வேண்டும்.
ஒருவர் தொடர்ந்து 18 ஆண்டுகள் இத்திட்டத்தில் முதலீடு செய்து வந்தால் ஓய்வு காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 வருமானம் கிடைக்கும்.தம்பதிகள் இருவர் இத்திட்டத்தில் முதலீடு செய்து வந்தால் ஓய்வு காலத்தில் ரூ.10,000 வரை மாத மாதம் ஓய்வூதியம் கிடைக்கும்.
நீங்கள் 18 வயதில் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கியிருந்தாலும் 60 வயது பூர்த்தியான பிறகே இத்திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியும்.நீங்கள் அதிகமாக பிரீமியம் செலுத்தி வந்தால் பென்ஷன் தொகை அதிகரிக்கும்.
அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தவர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கை துணைக்கு ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.ஒருவேளை இருவருமே இறந்துவிட்டால் அவர்களது நாமினிக்கு ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.இத்திட்டத்தில் சேர ஆதார்,ரேசன்,வாக்காளர் அட்டை,பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவை தேவைப்படும்.