ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! உடனே அப்ளை செய்யுங்கள்!!
நம் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெற முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.நாட்டிலுள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நோக்கில் வீடு இல்லாத ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டி தர வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.இதுவரை சுமார் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் ஈடுபவர்கள் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவர்.இந்நிலையில் தற்பொழுது கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என்று 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் யாருக்கு இலவச வீடு கிடைக்கும்?
1)வீடற்ற குடும்பம்
2)ஒன்று அல்லது இரண்டு அறைகள் உள்ள கூரை கொண்ட குடும்பம்
3)16 முதல் 59 வயது வரையிலான ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பம்
4)மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம்
5)நிலமற்ற குடும்பங்கள்
6)ஆண்டிற்கு ரூ.3,00,000த்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பம்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான தகுதி
*இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
*நிரந்தர வீடு இருக்கக்கூடாது.
*18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
*ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
*ரேசன் கார்டு இருக்க வேண்டும்.
*ஓட்டர் ஐடி இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
3.வேலை அட்டை
4.வங்கி கணக்கு எண்
5.ஸ்வச் பாரத் மிஷன்(SBM) பதிவு எண்
6.மொபைல் எண்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
படி 01:
முதலில் https://pmaymis.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
படி 02:
பிறகு “Awaassoft” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு “டேட்டா என்ட்ரி” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி 03:
அடுத்து “DATA ENTRY FOR AWAAS” என்பதைத் கிளிக் செய்து உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து “தொடரவும்” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 04:
அடுத்து பெயர்,கடவுச்சொல்,கேப்ட்சா ஆகியவற்றை என்டர் செய்து உள்நுழையவும்.பிறகு பயனாளிகள் பதிவு படிவம் ஷோ ஆகும்.அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
படி 05:
அதன் பிறகு வங்கிக் கணக்கு விவரங்கள நிரப்ப வேண்டும்.பிறகு வேலை அட்டை எண்,ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண்(SBM) போன்றவற்றை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.பிறகு உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு இலவச வீடு திட்ட பயனாளிகள் லிஸ்ட்டில் சேர்க்கப்படுவீர்கள்.