12% வட்டி கொடுக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!
2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் அதிக கவனம் பெற்ற திட்டமாக குழந்தைகளுக்கான NPS வாத்சல்யா உள்ளது.இந்த திட்டத்தின் ஸ்பெஷல் இதர திட்டங்களை காட்டிலும் அதிகப்படியான வட்டி வழங்கக் கூடியதாக உள்ளது.
அஞ்சல் அலுவலங்களில் கொடுக்கப்படும் வட்டியை காட்டிலும் NPS வாத்சல்யா திட்டத்தின் மூலம் அதிக லாபம் பெறமுடியும்.அஞ்சல் அலுவலங்களில் அதிக வட்டி(8.2%) வழங்கக் கூடிய திட்டமாக பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா உள்ளது.ஆனால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்தால் 12% வரை வட்டி பெறமுடியும்.
அஞ்சல் அலுவலங்கங்களில் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய வயது வரம்பு இருக்கிறது.ஆனால் NPS வாத்சல்யா திட்டத்தை பொறுத்தவரை அடிப்படை வயது வரம்பு எதுவும் இல்லை.இந்த திட்டத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரின் பெயரிலும் முதலீடு செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 80CCB(1B) பிரிவின் கீழ் ரூ.50,000 வரை வரிச்சலுகை பெற முடியும்.குழந்தைகளுக்கான தேசிய ஓய்வூதியம் என்ற இந்த திட்டம் 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் NPS வாத்சல்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.இத்திட்டத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்தில் முதலீடு செய்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் இத்திட்டம் சாதாரண NPS திட்டமாக மாற்றப்பட்டு விடும்.