மத்திய அரசின் மகத்தான திட்டம்! இனி ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய்!!

Photo of author

By Jeevitha

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள தொழிலாளர்களுக்கென்றே மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இ- ஷ்ரம் என்ற திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 12  இலக்க எண்கள் கொண்ட லேபர் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை பெற முடியும். மேலும் இத்திட்டத்தின்மூலம் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற முடியும்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இ-ஷ்ரம் திட்டத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்பவர்களது வயது, தொழில், ஆகியவற்றின் அடிப்படையில்  இ-ஷ்ரம் திட்டத்தில் உதவித்தொகையானது வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட்டு வரும்.

18 முதல் 59 வரை உள்ள அமைப்புசாரா தொழில் செய்யும் இந்தியக் குடிமகன்கள் அனைவராலும் இ -ஷ்ரம் அட்டையைப் பெறலாம். அதிகாரப்பூர்வ வலைத்தள முகவரியான eshram.gov.in என்ற போர்ட்டலில் இ-ஷ்ரம் அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்ய வங்கி பாஸ்புக், ஆதார் அட்டை ஆகியவை தேவைப்படும். விண்ணப்பதாரருடைய கைபேசி எண்ணானது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பிய பிறகு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினைக் கொடுக்கத் தொழிலாளர் அலுவலகத்தினை அணுக வேண்டும். இல்லாவிடில் CSC மையத்தையோ இ- சேவை மையத்தையோ அணுகுவதன் மூலம் இ-ஷ்ரம் அட்டைக்குப் பதிவு செய்ய முடியும்.

வாழ்வாதாரத்தை உயர்த்த கொண்டுவரப்பட்டுள்ள இ-ஷ்ரம் திட்டத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், தொழிலாளிகள் விபத்தில் ஊனமுற்றால் ஒரு லட்சம் ரூபாயும் பெற முடியும்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த போர்ட்டலில் நானூறு வகையான தொழிலாளர்களும் முப்பது வகையான வணிகத் துறையினரும் பதிவு செய்ய முடியும். விபத்துக் காப்பீட்டுத் தொகையாக இரண்டு லட்சம் ரூபாயைப் பெற முடியும். வீடு கட்டுதல், குழந்தைகளின் கல்வி போன்ற பலவைகயான நிதியுதவிகள் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. அடல் பென்சன் யோஜனா போன்ற திட்டங்களின் மூலம் பென்சன் தொகையாக மாதந்தோறும் ரூ.3000 யை 60 வயதுக்கு மேற்பட்டவர்களால் பெற்றுப் பயனடைய முடியும்.