மத்திய அரசின் முக்கியப் புள்ளி தமிழகத்திற்கு வருகை! இந்த சர்ச்சைக்கு தீர்வு காணவா?

Photo of author

By Rupa

மத்திய அரசின் முக்கியப் புள்ளி தமிழகத்திற்கு வருகை! இந்த சர்ச்சைக்கு தீர்வு காணவா?

நமது தமிழ்நாட்டின் திமுக ஆட்சி அமைத்தால் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியது.அந்த வாக்குறுதிகளில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை முக்கிய பங்காக இருந்தது.ஆனால் திமுக அரசு ஆட்சி அமைத்தும் இந்த கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை.தமிழக அரசு பலமுறை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டு மனு கொடுத்தும் மத்திய அரசு சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே நீட் தேர்வு தேதி வெளியிடப்பட்டது இதனால் தமிழகத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வண்ணமாக உள்ளது பல தரப்பினரும் நீட் தேர்வு ரத்து செய்யும்படி கேட்டு வருகின்றனர்.

இது நடந்து கொண்டிருக்கும் பொழுது தமிழகத்திற்கு அடுத்த அடியாக காவேரி மேகதாது அணை கட்டும் பிரச்சனை தலை விரித்து ஆட தொடங்கியது கர்நாடகாவிற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.மேகதாது அணை கட்டுதல் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.அந்த வகையில் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 19ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணச் சென்றார்.அப்பொழுது அவரிடம் மேகதாது அணை கட்டுதல் ரத்து செய்யும்படியும், நீட் தேர்வை நடத்துவது ரத்து செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு சட்டசபை நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.முதல்வரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழகத்திற்கு 5 நாள் சுற்றுப்பயணம் வர உள்ளார்.அவர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி காலை 10 மணிக்கு மேல் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதியம் சென்னை வந்து அடைவார் என கூறுகின்றனர். பிறகு மாலை நடக்கவிருக்கும் சட்டசபை நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது.இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வேலூர் கோட்டையில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடவும் உள்ளார்.இவர் தமிழகத்திற்கு வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இவர் வரும் இவ்வேளையில் அதிமுக கட்சியானது கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது.இதன் முக்கிய கோரிக்கையே நீட் தேர்வு ரத்து செய்யவது ஆகும்.இவற்றைக் கண்டு ஜனாதிபதி ஏதேனும் முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.