மத்திய அரசின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சூப்பரான வருமானம் தரும் திட்டம் தான் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம். இது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் என்பது மட்டுமின்றி, இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதிய வடிவில் வருமானமும் கிடைக்கும். மத்திய அரசால் 26 மே 2020 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 31 மார்ச் 2023 வரை முதலீடு செய்யலாம்.
60 வயதை தாண்டிய கணவன்-மனைவி இருவரும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முன்னர் முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சமாக இருந்த நிலையில் இது தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கணவன், மனைவி இருவரும் ரூ.15 லட்சம் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் இதில் உங்களுக்கு 7.40 சதவீத வருடாந்திர வட்டியும் கிடைக்கும்.
நீங்கள் செய்யும் முதலீட்டின் படி, ஆண்டு வட்டி ரூ. 2,22,000, அதை 12 மாதங்களில் பிரித்தால், ரூ.18500 வருகிறது, இந்த தொகை தான் உங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக கிடைக்கும். அதுவே இந்த திட்டத்தில் தனிநபர் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டு வட்டி ரூ.111000 மற்றும் அவருக்கு மாத ஓய்வூதியம் ரூ.9250 கிடைக்கும். இந்த திட்டத்தின் மொத்த முதிர்வு காலம் 10 ஆண்டுகள் ஆகும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.