சிலிண்டர் திருட்டை தடுக்க மத்திய அரசின் ஸ்கேனிங் முறை!! இனி இதை செய்தால் மட்டுமே LPG கிடைக்கும்!!

Photo of author

By Divya

சிலிண்டர் திருட்டை தடுக்க மத்திய அரசின் ஸ்கேனிங் முறை!! இனி இதை செய்தால் மட்டுமே LPG கிடைக்கும்!!

நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா.இந்த திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது உஜ்வலா 2.0 என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர் விலைவாசி உயர்வு,சிலிண்டர் விலை உயர்வால் நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்பு கனவாகவே இருந்து வந்தது.இந்நிலையில் ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு + மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்க மத்திய அரசு இந்த திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாற போகிறது. என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.அதாவது QR குறியீடுகளுடன் கூடிய எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

இனி QR கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் சிலிண்டர் பெற முடியும்.சிலர் திருட்டு தனமாக சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றனர்.வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகம் என்பதால் வீட்டு பயன்பாட்டிற்கு விற்க்கப்படும் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதுபோன்ற திருட்டு செயல்களை தடுப்பதற்காக இந்த QR ஸ்கேனிங் முறை கொண்டுவரப்பட உள்ளது.

மேலும் மானிய விலையில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை அங்கீகரிப்பதற்காக டெலிவரி ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.சிலிண்டர் விற்பனை செய்யும் பொழுதே ஆதார் விவரங்கள் உங்களுடையதா? என்பதை சரி பார்த்து ஊழியர்கள் தங்களின் கைரேகை பதிவு பயோமேட்ரிக் மூலம் பதிவு செய்வார்கள்.ஒருவேளை நீங்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் LPG சிலிண்டர் பெற்றுக் கொள்ள முடியும் என்று LPG சிலிண்டர் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.