மத்திய அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! குறைந்த வட்டியில் அதிக கடன்!!

Photo of author

By Jeevitha

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் கைவினைத் தொழில்களுக்கான கடன் உதவித் திட்டத்தில் வெறும் 5% வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு  “பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்களுக்கு மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. அதில் விண்ணப்பித்தவர்களுக்கு அரசு 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடன் வழங்குகிறோம் என அறிவித்துள்ளது. அதற்கான வட்டி வெறும் 5% என தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற இதுவரை 2.59 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சுமார் 23.97 லட்சம் விண்ணப்பதாரர்களின் பதிவும் நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலில் அரசாங்கம் ரூ.1 லட்சம் கடனாக வழங்கும். பிறகு அந்த கடனை திருப்பி செலுத்தியவுடன் ரூ.2 லட்சம் கூடுதல் கடனுக்கான தகுதி பெறுவார். இந்த இரண்டு முறைகளிலும் வட்டி விகிதம் என்பது வெறும் 5 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் இது மட்டும் அல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு தொழிலுக்கு தேவையான கருவிகளை வாங்குவதற்கு ரூ.15,000 வவுச்சர் வழங்கப்படுகிறது. இந்த பணத்தில் தங்களுக்கு தேவையான தொழில் தொடர்பான உபகரணங்களை வாங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.