பெண் குழந்தைகளின் எதிர்கால வாழக்கையை சிறப்பாக்கும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம்.பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு சரியான நிதி திட்டமிடல் செய்தல் அவசியமாகும்.பெண் குழந்தை பிறப்பு முதல் அவரின் கல்வி,திருமணம் வரை அதிக நிதி தேவைப்படுவதால் நிதி சார்ந்த பல பிரச்சனைகளை பெற்றோர்கள் சந்திக்கின்றனர்.இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு நிதி சார்ந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க செல்வமகள் சேமிப்பு என்ற திட்டத்தை தபால் நிலையங்கள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தரக் கூடிய திட்டமாக இது இருக்கின்றது.இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும்.இத்திட்டத்தை தொடங்கிய பின்னர் மாதந்தோறும் அல்லது ஒருவருடத்திற்கு ஒருமுறை பணம் செலுத்த வேண்டும்.இத்திட்டத்திற்கான முத்திர்வு காலம் பெண் குழந்தையின் 21 வயது ஆகும்.இது ஒரு வருமான வரி சேமிப்பு திட்டமாகும்.
இந்திய குடியுரிமை பெற்ற பெண் குழந்தைகள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.பெண் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் இத்திட்டத்தை தொடங்கலாம்.பெண் குழந்தையின் ஆதார்,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,பான்.பிறப்பு சான்றிதழ்,முகவரி சான்றிதழ் உள்ளிட்டவை முக்கிய ஆவணங்கள் ஆகும்.தற்பொழுது இந்த திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் ரூ.1,50,000(ஆண்டு) முதலீடு செய்யப்பட்டால் 15 ஆண்டுகள் கழித்து முதலீட்டு தொகை ரூ.22,50,000 ஆக இருக்கும்.முதலீட்டு தொகைக்கான வட்டி ரூ.46,77,578 ஆக கிடைக்கும்.எனவே பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்தால் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.